தேர்தலில் வாக்களிக்க சின்னம் பொறித்த முகக்கவசத்துடன் சென்ற அமைச்சர்: அமைச்சரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியதால் வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
தேர்தலில் வாக்களிக்க சின்னம் பொறித்த முகக்கவசத்துடன் சென்ற அமைச்சர்: அமைச்சரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியதால் வழக்குப்பதிவு

கயா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் கட்சி சின்னம் பொறித்த முகக்கவசம் அணிந்தவாறு வாக்களித்த அமைச்சர் பிரேம் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கயா தொகுதியில் வாக்களிக்க அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பிரேம் குமார் தாமரை வரையப்பட்ட முகக்கவசம் அணிந்தபடி வாக்களித்தார். தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் தேர்தல் சின்னம் பொறித்த முகக்கவசம் அணிந்து வந்த அவரை காவலர்களோ, தேர்தல் அதிகாரிகளோ, தடுத்து நிறுத்தவில்லை. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அமைச்சர் பிரேம்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மூலக்கதை