நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது?... லிட்டருக்கு ரூ6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது?... லிட்டருக்கு ரூ6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்

புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளதால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால், லிட்டருக்கு ரூ6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 45 டாலராக இருந்த  நிலையில், ஒரு மாத இடைவெளியில் 40 டாலராக குறைந்துள்ளது. இதனை பயன்படுத்தி நாட்டின் பொருளாதா நெருக்கடியை சமாளிக்க கலால் வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக இந்தாண்டு மார்ச்  மாதத்தில், பெட்ரோல் மீதான கலால் வரி (மதிப்பு கூட்டு வரி) ரூ. 18, டீசலுக்கு ரூ. 12 என்றும்  அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, மே மாதத்தில், மத்திய அரசு  பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 12 ஆகவும், டீசல் மீதான கலால் வரியை ரூ.

9  ஆகவும் உயர்த்தியது.

தற்போது, ​​பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 70 சதவீதம் வரி  விதிக்கப்படுகிறது.

இது மீண்டும் அதிகரித்தால், இந்த விகிதம் 75 முதல் 80 சதவீதம் வரை இருக்கலாம். பொருளாதார அறிக்கையின்படி, கொரோனா தொற்று நெருக்கடியால் ஏற்படும் நிலைமையைச் சமாளிக்க, கூடுதலாக நிதிகளை திரட்ட மத்திய அரசு தயாராகி வருகிறது.

அதற்காக, பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை மீண்டும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலால் வரியை உயர்த்தும்பட்சத்தில் இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ. 60,000 கோடியை திரட்ட முடியும்.

வரியை உயர்த்தாதபட்சத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ. 30 ஆயிரம் கோடி வரை திரட்ட முடியும் எனக் கூறப்படுகிறது. எனவே, கலால் வரியை நிர்ணயிப்பதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருவதால், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.



கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகபட்சமாக அதிகரிக்கப்படாத நிலையில், தற்போது கலால் வரியை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 3 முதல் 6 ரூபாயாக  உயர்த்த முடியும்.

அதுவும் பீகார் தேர்தல் முடிவுக்கு பின்னர், விலை உயர்வு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 2014ல், பெட்ரோல் மீதான மொத்த வரி லிட்டருக்கு ரூ. 9. 48 ஆகவும்,  டீசல் மீது லிட்டருக்கு ரூ. 3. 366 ஆகவும் இருந்தது.

அப்போதிருந்து, இன்று  வரை பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 32. 98 ஆகவும், டீசல் மீதான வரி  லிட்டருக்கு ரூ. 31. 83 ஆகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தும்பட்சத்தில் லிட்டருக்கு ரூ.

6 வரை விலை உயரும் எனக் கூறப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர்ச்சியான வரி அதிகரிப்பு காரணமாக, சாமானியர்களும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் அவர்களே. . , பொதுமக்களிடம் கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள். உங்கள் நண்பர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துங்கள்.

தன்னிறைவுடன் இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை