உத்தராகண்ட் முதல்வர் மீதான ஊழல் புகார் பற்றி வழக்குப்பதிவு செய்ய மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தினகரன்  தினகரன்
உத்தராகண்ட் முதல்வர் மீதான ஊழல் புகார் பற்றி வழக்குப்பதிவு செய்ய மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ராஞ்சி: உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீதான ஊழல் புகார் பற்றி வழக்குப்பதிவு செய்ய மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி வகித்து வருகிறார். இவர் மீது லஞ்சப் புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர் ஒருவர் தாக்கல் செய்த மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. இதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததை அடுத்து, அதில் முதல்வர் மீது வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவிடக் கோரிக்கை இடப்பட்டது. அதையொட்டி முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை