நிலவில் தண்ணீர் : விஞ்ஞானிகள் உறுதி

தினமலர்  தினமலர்
நிலவில் தண்ணீர் : விஞ்ஞானிகள் உறுதி

நிலவில் தண்ணீர் : விஞ்ஞானிகள் உறுதி

வாஷிங்டன் : இந்தியா அனுப்பிய சந்திரயான் - 1 விண்கலம் உட்பட, நிலவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், அங்கு ஹைட்ரஜன் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. மேலும், நிலவின் குளிர் பகுதியிலும், சூரியனுக்கு எதிரான பகுதியிலும், நீர் இருந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இந்நிலையில், சூரிய ஒளிபடும் நிலவின் மேற்பகுதியில், நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளதாக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'நாசா' மற்றும் ஹவாய் பல்கலை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆயுதங்கள் வாங்கும் தைவான்

தைபே : ஆசிய நாடான தைவானுக்கு அச்சுறுத்தலாக சீனா உள்ளது. இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த, அமெரிக்காவிடம் இருந்து ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை, தைவான் வாங்கி வருகிறது. ''சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கவே இந்த ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன,'' என, தைவான் ராணுவ செய்தித் தொடர்பாளர், ஷன்வென் கூறியுள்ளார்.

7 பயங்கரவாதிகள் பலி

வாஷிங்டன் : மேற்காசிய நாடான சிரியாவில் நடத்திய வான்வழி தாக்குதலில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, ஏழு பேர் கொல்லப்பட்டதாக, அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

தலிபான் தாக்குதல் 3 பேர் பலி

காபூல் : தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், போலீஸ் முகாம் அருகே, தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒரு பக்கம் அமைதி பேச்சு நடந்துவரும் நிலையில், தலிபான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

துப்பாக்கி வெடித்து சிறுவன் பலி

ஹூஸ்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டனுக்கு அருகே, ஒரு வீட்டில், 3 வயது குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடந்தன. அப்போது கீழே இருந்த துப்பாக்கியை எடுத்து, அந்தக் குழந்தை விளையாடியுள்ளது. தவறுதலாக இயக்கியதில், மார்பில் குண்டு பாய்ந்து, அந்தச் சிறுவன் உயிரிழந்தான். அமெரிக்காவில், இந்த ஆண்டில் மட்டும், தவறுதலாக நடந்துள்ள, 229 விபத்துகளில், 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

போலீஸ் சுட்டு 3 பேர் பலி

ஜான்ஜிபார் : கிழக்கு ஆப்ரிக்க நாடான தன்சானியாவில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் மோசடி நடப்பதாக பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், போலீசார் சுட்டதில், மூன்று பேர் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.


மூலக்கதை