சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சரவதேச அளவில் ஸ்மார்ட் போன், தொலைகாட்சி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு முன்னணியாக கருதப்படும் சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார். அவருக்கு வயது 78 ஆகும். தென்கொரியாவில் தோன்றி உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் புகழ் பெற்று விளங்கும் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மருத்துவமனையில் உயிரிழந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உயிர் பிரிந்த போது அவரது மகனும், தற்போதைய நிறுவனத்தின் தலைவருமான ஜெ லி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர். மீன் மற்றும் பழ ஏற்றுமதி தொழிலை சாம்சங் என்ற பெயரில் தொடங்கி நடத்தி வந்த தந்தையின் மறைவுக்கு பிறகு 1987-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற லீ குன் ஹீ தொலைகாட்சி தயாரிப்பில் தனது கவனத்தை செலுத்தினார். அவரது உழைப்பில் தொலைகாட்சி மட்டுமின்றி மிகப்பெரிய ஸ்மார்ட் போன்கள், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக சாம்சங் உயர்ந்தது. சாம்சங் நிறுவனத்தில் மெமரி சிப் ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. நிறுவனத்தின் சொத்து மதிப்பு 30 லட்சம் கோடி ரூபாய் ஆகும். தென் கொரியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் லீ குன் ஹீ-ன் சொத்து மட்டும் 1.50 லட்சம் கோடி ரூபாய். உலகின் முன்னணி நிறுவனமாக சாம்சங்கை வளர்த்த போதிலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் லீ குன் ஹீ ஆளானார். 1996-ம் ஆண்டு தென் கொரியா நாட்டு அதிபருக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். 2014-ம் ஆண்டு மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லீ குன் ஹீவீடு திரும்பாமலே காலமானார். அமெரிக்கா, ஜப்பான் போட்டிகளை சமாளித்து உலகின் முதல் தர நிறுவனமாக மாற்றிய பெருமை லீ குன் ஹீ-க்கு உண்டு.

மூலக்கதை