ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்

தினமலர்  தினமலர்
ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்

அபுதாபி: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அரைசதம் கடந்து கைகொடுக்க மும்பை அணி 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின.


மும்பை அணியில் நாதன் கூல்டர் நைல் நீக்கப்பட்டு ஜேம்ஸ் பட்டின்சன் சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


மும்பை அணிக்கு ஹர்திக் பாண்ட்யா (60*), சூர்யகுமார் யாதவ் (40), இஷான் கிஷான் (37), சவுரப் திவாரி (34) கைகொடுக்க, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், கோபால் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை