கொரோனா 'கெட் அவுட்!' தொற்று எண்ணிக்கை சரிகிறது

தினமலர்  தினமலர்
கொரோனா கெட் அவுட்! தொற்று எண்ணிக்கை சரிகிறது

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதால் படிப்படியாக பரிசோதனைகளும் குறைக்கப்பட்டு வருகின்றன.திருப்பூர் மாவட்டத்தில், சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது .
ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது, ஜூன், ஜூலை மாதங்களில், தினமும், 800 முதல், 1,200 பேர் வரையும், செப்., மாதம் மற்றும் அக்., முதல்இரு வாரங்களில், 2,500க் கும் மேற்பட்டவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது, தொற்று குறையத் தொடங்கியுள்ளதால், படிப்படியாக பரிசோதனைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:தொற்றால் பாதிக்கப்படுவோர் குறைந்து வந்தா லும், கொரோனாவுக்கு இதுவரை மருந்து இல்லாத தால், மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.சமூக இடைவெளி, முக கவசம் அணிவது, கைகளை சோப்பு போட்டு கழுவுவதை வாடிக்கையாகிக் கொள்ள வேண்டும். அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
இதற்கென, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 19 இடங்களில், சளி மாதிரி சேகரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், பரிசோதனைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைத்தால், கொரோனா இல்லாத மாவட்டமாக, திருப்பூரை மாற்ற முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை