கொள்ளை! மதுரை ஆவின் ஒப்பந்த லாரிகளில் பால்....கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா

தினமலர்  தினமலர்
கொள்ளை! மதுரை ஆவின் ஒப்பந்த லாரிகளில் பால்....கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா

மதுரை : மதுரையில் ஆவின் ஒப்பந்த லாரிகளில் நடக்கும் பால் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

ஆவினுக்கு தினமும் உற்பத்தியாளர்களிடமிருந்து டேங்கர் லாரிகள் மற்றும் ஆவின் ஒப்பந்த லாரிகள் மூலம் பால் சேகரிக்கப்படுகின்றன. அலங்காநல்லுார், வாடிப்பட்டி, செல்லம்பட்டி, அல்லிகுண்டம், மேலுார் உட்பட 15 வழித்தடங்களில் தினமும் ஒரு லட்சம் லிட்., பால் சேகரிக்கப்படுகின்றன. சேகரித்த இடத்தில் இருந்து ஆவினுக்கு வரும் வரை ஒரு லாரியில் குறைந்தது 50 - 100 லிட்., பால் கொள்ளை போகின்றன. இதை ஆவின் கணக்கில் எடுப்பதில்லை என பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளன.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் வெண்மணி சந்திரன் கூறியதாவது:ஒரு லாரியில் 40 லிட்., அளவுள்ள 90 முதல் 120 கேன்கள் வரை ஏற்றப்படுகின்றன. வழித்தடங்களில் சில சங்கங்களின் காலி பால் கேன்கள் ஏற்றப்பட்டு லாரி, ஆவினுக்கு செல்லுவதற்குள் பிற கேன்களில் அரை லிட்., முதல் ஒரு லிட்., வரை திருடி காலி கேன்களை நிரப்பி விடுகின்றனர். இது ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவதில்லை. சில டிரக் மேன்களுக்கு தொடர்பு உள்ளது. அளவை சரிபார்க்கும் போது ஒரு கேனுக்கு ஒரு லிட்., வரை குறைகிறது. உற்பத்தியாளர்கள் இந்த இழப்பை ஏற்கின்றனர். இந்த பால் கொள்ளையை தடுக்க ஒப்பந்த லாரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திட வேண்டும் என்றார்.

மூலக்கதை