கோவையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் பயணிக்க பயப்படாதீங்க

தினமலர்  தினமலர்
கோவையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் பயணிக்க பயப்படாதீங்க

கோவை:கோவையில் இருந்து இயக்கப்படும் ஆறு ரயில்களிலும், தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து மயிலாடுதுறை, சென்னைக்கு என தினமும் ஆறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் பாதுகாப்பு கருதி, ஸ்டேஷன் நடைமேடைகள், தண்டவாளம் தினமும் துாய்மைப்படுத்தப்படுகிறது. அதேபோல், கோவையில் இருந்து புறப்படும்அனைத்து ரயில்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரயில்வே பணிமனையில் தினமும், 80க்கும் மேற்பட்ட பெட்டிகளின் வெளிப்பகுதி, இருக்கைகள், டாய்லெட் என அனைத்தையும் தவறாமல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய, ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மூலக்கதை