மும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020

தினமலர்  தினமலர்
மும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020

அபுதாபி: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாச ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

ஹர்திக் விளாசல்: மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (6) ஏமாற்றினார். பின் இணைந்த இஷான் கிஷான் (37), சூர்யகுமார் யாதவ் (40) ஜோடி ஓரளவு கைகொடுத்தது. கேப்டன் போலார்டு (6) நிலைக்கவில்லை. அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இவருக்கு சவுரப் திவாரி (34) ஒத்துழைப்பு தந்தார். அன்கித் ராஜ்பூட் வீசிய 18வது ஓவரில் 4 சிக்சர் பறக்கவிட்டார் ஹர்திக், கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி அடித்து, 20 பந்தில் அரைசதம் கடந்தார்.

மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. ஹர்திக் (60 ரன், 7 சிக்சர், 2 பவுண்டரி), குர்னால் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ராஜஸ்தான் அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் (107 ரன், 3 சிக்சர், 14 பவுண்டரி), சாம்சன் (54 ரன், 3 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை