துபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020

தினமலர்  தினமலர்
துபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020

துபாய்: ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசனுக்கான ‘பிளே–ஆப்’ அட்டவணை வெளியிடப்பட்டது. பைனல், நவ. 10ல் துபாயில் நடக்கிறது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இதன் லீக் சுற்று போட்டிகள் வரும் நவ. 3ல் முடிவடைகிறது. இந்நிலையில் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்டது. இதன்படி, புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கான தகுதிச் சுற்று–1, நவ. 5ல் துபாயில் நடக்கவுள்ளது. இதேபோல, நவ. 10ல் துபாயில் பைனல் நடக்கவுள்ளது.

புள்ளிப்பட்டியலில் மூன்றாவது, 4வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கான ‘எலிமினேட்டர்’ மற்றும் தகுதிச் சுற்று–2 (தகுதிச் சுற்று 1ல் தோல்வி – எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணிகள்) போட்டிகள் முறையே நவ. 6, 8ல் அபுதாபியில் நடக்க உள்ளன.

பெண்களுக்கான ‘டுவென்டி–20’ சேலஞ்ச் தொடருக்கான போட்டிகள் வரும் நவ. 4–9ல் சார்ஜாவில் நடக்கவுள்ளன. இதன் பைனல் நவ. 9ல் நடக்கிறது.

மூலக்கதை