மும்பையிடம் படுதோல்வியால் முதல் அணியாக வெளியேறியது : பேட்டிங்கும் சரியில்லை அதிர்ஷ்டமும் இல்லை; சென்னை கேப்டன் டோனி புலம்பல்

தினகரன்  தினகரன்
மும்பையிடம் படுதோல்வியால் முதல் அணியாக வெளியேறியது : பேட்டிங்கும் சரியில்லை அதிர்ஷ்டமும் இல்லை; சென்னை கேப்டன் டோனி புலம்பல்

சார்ஜா: யுஏஇல் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் நேற்று இரவு நடந்த 41வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை மும்பை பந்து வீச்சில் திணறியது. 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக சாம் கரன் 52(47பந்து), டோனி 16, இம்ரான்தாகீர் 13, தாகூர் 11 ரன் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். மும்பை தரப்பில் போல்ட் 4, பும்ரா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய மும்பை 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 116 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிகாக் 37 பந்தில் 46, இஷான் கிஷன் 37ந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 68 ரன்  எடுத்தனர். போல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். 10வது போட்டியில் 7வது வெற்றியை பெற்ற மும்பை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. மேலும் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது. சென்னை 11வது போட்டியில் 8வது தோல்வியுடன் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.தோல்விக்கு பின் டோனி கூறியதாவது: மனசு வலிக்கத்தான் செய்கிறது. இந்த வருடம் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. எங்கே தவறு நடந்தது என பார்க்க வேண்டும். எப்படி தோற்கிறோம் என்கிறதை பொறுத்தது என சொல்ல முடியாது, ஆனால் இந்த நேரத்தில் மனவருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இரண்டாவது போட்டிக்கு பின் என்ன தவறு நடந்தது என பார்க்க வேண்டும். ராயடுவுக்கு காயம் ஏற்பட்டது. பந்துவீச்சில் சொதப்பினோம், பேட்ஸ்மேன்கள் தங்கள் முழு திறனை கொடுக்கமுடியவில்லை,  அதிர்ஷ்டமும் எங்கள் வசம் இல்லை. முதலில் பேட் செய்ய நினைத்த போட்டிகளில் டாஸ் ஜெயிக்கவில்லை. ஆனால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தபோது பனி தாக்கம் இருந்தது. நன்றாக விளையாடததற்கு 100 கரணங்கள் சொல்லலாம், ஆனால் எப்பேர்ப்பட்ட சூழலிலும் முழு திறனுடன் இல்லாமல் விளையாடினோமா என நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். ஸ்டாட்ஸ் நல்ல டீம் என்றே சொல்கிறது, ஆனால் அது போல விளையாடவில்லை. தொடர்ச்சியான பேட்டிங் சொதப்பல்கள். எப்பொழுதும் முடிவு நமக்கு சாதகமாக அமையும் என்பது கிடையாது, இது கிரிக்கெட்டின் ஒரு அங்கம் தான், இருப்பதிலேயே கடினமான ஒன்று எனில் வருத்தத்தில் இருக்கும் சமயத்தில் சிரித்துக்கொண்டே கஷ்டமான சூழலை எதிர்கொள்வது. அதனை செய்தனர் டீம் நபர்கள்.நிர்வாகம் பெரிதாக பதற்றம் ஆகவில்லை. அடுத்த சீசனை பற்றி யோசிக்க வேண்டும். விளையாடும் மைதானம் எப்படி, எந்த மாதிரி வீரர்கள் தேவை என ஐடியா பண்ண வேண்டும். அடுத்த மூன்று போட்டிகள் அதற்கு பயன் படும். அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம். யார் அழுத்தத்தை சமாளித்து பேட்டிங், பௌலிங் நன்றாக செய்கிறார்கள் என. பெஞ்சில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் .என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது. எனவே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடுவேன். அடுத்துவரும் மூன்று போட்டிகளில் நாங்கள் சிறந்ததை கொடுப்போம்.” என பேசிமுடித்தார்.மும்பை கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், 100 ரன்னுக்குள் சென்னையை கட்டுப்படுத்த விரும்பினோம். ஆனால் சாம்கரன் நன்றாக பேட் செய்தார். வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியின் முயற்சி தான் என நினைக்கிறேன். கேப்டன்சி என்பது வேலையின் ஒரு பகுதி. அதற்கு தகுதியான போதுமான போட்டிகளில் ஆடி உள்ளேன். ஆரம்பத்தில் 2, 3 விக்கெட் எடுப்பது  ஊக்கம் அளிக்கும். ஆனால் 4, 5 விக்கெட் பெறுவது அருமை. வேலையை முடித்த தொடக்க வீரர்களும் அருமை, என்றார்.

மூலக்கதை