ஐ.பி.எல்.,: டில்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்.,: டில்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில், டில்லி அணி வெற்றி பெற 195 ரன்கள் என்ற இலக்கை கோல்கட்டா அணி நிர்ணயித்துள்ளது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் போட்டியில் கோல்கட்டா, டில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற டில்லி அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து கோல்கட்டா அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர் சுப்மன் கில் 9 , ராகுல் திரிபாதி 13, தினேஷ் கார்த்திக் 3 ரன்களில் அவுட்டானார்கள். இதன் பின் ஜோடி சேர்ந்த நிதிஷ் ராணா, சுனில் நரைன் ஜோடி பொறுப்பாக ரன் சேர்த்தனர். 4 வது விக்கெட்டிற்கு 115 ரன்கள் குவித்தனர். சுனில் நரேன் 32 பந்துகளில் 64 ரன்கள் குவிந்து ரபாடா பந்தில் அவுட்டானார்.

அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா 53 பந்துகளில் 81 ரன்களுடனும், கேப்டன் இயான் மோர்கன் 9 பந்துகளில் 17 ரன்னிலும் அவுட்டானார்கள். கோல்கட்டா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்துள்ளது.

மூலக்கதை