ஜம்மு-காஷ்மீரில், தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம் : மெஹ்பூபா முஃப்தி மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரில், தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம் : மெஹ்பூபா முஃப்தி மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில், அம்மாநில கொடியை ஏற்றாமல், தேசியக் கொடியை ஏற்றவிட மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை, தேசவிரோத வழக்கில் கைது செய்யவேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகை செய்யும் இந்திய அரசியலமைப்பின் 370-வது விதி ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அம்மாநில தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். கடந்த 14 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த மெஹ்பூபா முஃப்தி, கடந்த 14-ம் தேதி அம்மாநில அரசால் விடுவிக்கப்பட்டார்.விடுதலைக்‍குப் பின்னர் நேற்று முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன்தான் தங்களுக்கு இணக்கம் என்றும், இன்றைய இந்தியாவுடன் இணக்‍கம் இல்லை என்றும் கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநில கொடியை காஷ்மீரில் மீண்டும் ஏற்றாமல், தேசியக்‍கொடியை உயர்த்தப் போவதில்லை என்று தெரிவித்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் குரலில் மெஹ்பூபா பேசுவதாகவும், அவரை தேச துரோக வழக்‍கில் கைது செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

மூலக்கதை