அரியானாவில் கவுன்சிலர் குளிக்கும் வீடியோ கால் பதிவை வெளியிட்டு ‘பிளாக்மெயில்’ செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு

தினகரன்  தினகரன்
அரியானாவில் கவுன்சிலர் குளிக்கும் வீடியோ கால் பதிவை வெளியிட்டு ‘பிளாக்மெயில்’ செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு

பதேஹாபாத், :அரியானாவில் கவுன்சிலர் குளிக்கும் வீடியோ கால் பதிவை வெளியிட்டு ‘பிளாக்மெயில்’ செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டம் 10வது வார்டு கவுன்சிலர் சோனு குக்கர் என்பவர், வழக்கம் போல் தனது வீட்டின் குளியல் அறையில் கடந்த சில நாட்களுக்கு முன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது ஸ்மார்ட் போனுக்கு ஒரு வீடியோ கால் அழைப்பு வந்தது. அவர் குளித்துக் கொண்டே அந்த போன் அழைப்பை ஏற்று பேசினார். எதிர்முனையில் பேசிய அடயா ராஜ்புத் என்ற இளம்ெபண், அரசின் நலத்திட்டம் பெறுதல் தொடர்பாக தனது தோழியின் கோரிக்கை குறித்து பேசினார். அவரும், வழக்கம் போல் குளித்துக் கொண்டே அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுதல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.அரைகுறை ஆடையுடன் கவுன்சிலர் குளித்துக் கொண்டு பேசிய வீடியோ காலை, அந்த இளம்பெண் பதிவு செய்து கொண்டு ‘நன்றி’ தெரிவித்து இணைப்பை துண்டித்துவிட்டார். ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் கவுன்சிலரை போனில் அழைத்த அந்த இளம்பெண், குளிக்கும் போது எடுத்த வீடிேயா குறித்து ேபசினார். அதிர்ச்சியடைந்த கவுன்சிலர், ‘இப்ப என்ன அதற்கு?’ என்று அதட்டினார். அந்த பெண், ‘இந்த வீடிேயாவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன். வீடியோ வெளியே வரக்கூடாது என்றால், பணம் கொடுக்க வேண்டும்’ என்று மிரட்டல் விடுத்து ‘பிளாக்மெயில்’ செய்தார்.வேறுவழியின்றி, அந்த பெண்ணை வரவழைத்து 22 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொடுத்து, சமூக ஊடகங்களில் வீடிேயாவை வெளியிடக் கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். சில நாட்கள் அமைதியாக இருந்த அந்த பெண், மீண்டும் கவுன்சிலருக்கு போனை போட்டு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்த முறை கவுன்சிலர் எது நடந்தாலும் பரவாயில்லை என நினைத்து பணம் தரமறுத்துவிட்டார். உடனே அந்த பெண், கவுன்சிலரின் குளியல் வீடியோவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பலருக்கும் பரவியது. கடைசியாக கவுன்சிலரின் குடும்பத்துக்கும் வந்தது.அதிர்ச்சியடைந்த கவுன்சிலரின் மனைவி, நடந்த விஷயங்களை தனது கணவரிடம் கேட்டறிந்தார். இப்பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக அந்த பெண் மீது, கவுன்சிலர் போலீசில் புகார் அளித்தார். அதில், ‘நான் குளிப்பதை வீடியோ எடுத்து அடயா ராஜ்புத் என்ற இளம்பெண் பிளாக் மெயில் செய்கிறார். சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், நான் குளிக்கும் காட்சிகளில் என்னை ஆபாசமாக சித்தரித்து ‘மார்பிங்’ செய்துள்ளார். எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதுெதாடர்பாக அடயா ராஜ்புத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வீடியோவையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

மூலக்கதை