'கிரே' பட்டியலில் பாகிஸ்தான் தொடர்கிறது

தினமலர்  தினமலர்
கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்கிறது

புதுடில்லி:ப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் 'கிரே' நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்க சம்பந்தபட்ட நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்காததை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்காத நாடுகள் 'கிரே' பட்டியலில் இடம் பெறும்.இந்த பட்டியலில்

இடம் பெறும் நாடுகளுக்கு உலக வங்கி சர்வதேச நிதியம் நிதி உதவி கிடைக்காது.பாகிஸ்தான் 2018 ஜூனில் இருந்து 'கிரே' பட்டியலில் இடம்பெற்று வருகிறது. இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு எப்.ஏ.டி.எப். அமைப்பு 27 நிபந்தனைகளை விதித்திருந்தது.இந்த நிலையில் எப்.ஏ.டி.எப். அமைப்பின் மூன்று நாள் கூட்டம் பாரிசில் நடந்தது. அதில் பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.முக்கியமான நிபந்தனைகளை நிறைவேற்றாததால் கிரே நிற பட்டியலில் பாகிஸ்தானை தெடார்ந்து வைத்திருக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மூலக்கதை