பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்

தினகரன்  தினகரன்
பாஜவின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்

வாஷிங்டன், :இந்திய தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவிலும் இலவச தடுப்பூசி ேதர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நடக்கும் பேரவை தேர்தலில் பாஜக தேர்தல் வாக்குறுதியில், மக்களுக்கு இலவச ெகாரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், பல மாநில முதல்வர்கள் இலவச தடுப்பூசி வழங்கல் குறித்து அறிவித்து வருகின்றனர். இந்த இலவச தடுப்பூசி விவகாரம் இந்தியாவில் பரபரப்பாக பேசுப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் நேற்று மாலை (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு இலவச தடுப்பூசி வழங்குவோம். எங்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கிடைத்தவுடன், உங்களுக்கு காப்பீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த தொற்றுநோயிலிருந்து அமெரிக்காவை மீட்க தீவிர கவனம் செலுத்தப்படும். கொரோனா தொற்றுநோயை எதிர்த்து 8 மாதங்களுக்கும் மேலாக ேபாராடி வருகிறோம். இதுவரை அதிபர் டொனால்ட் டிரம்ப், ெகாரோனா விவகாரத்தை சமாளிக்கும் எந்த திட்டமும் அவரிடம் இல்லை. அவர் மக்களை கைவிட்டுவிட்டார்’ என்றார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற நவ. 3ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை