ஐ.பி.எல்.,: கோல்கட்டா அணி பேட்டிங்

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்.,: கோல்கட்டா அணி பேட்டிங்

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் டாஸ் வென்ற, டில்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இன்று அபுதாபியில் நடக்கும் போட்டியில் கோல்கட்டா, டில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற டில்லி அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.டில்லி அணியை பொறுத்த வரையில் 10 போட்டியில் 7ல் வெற்றி பெற்று (3 தோல்வி) 14 புள்ளியுடன் வலுவான நிலையில் உள்ளது.

கோல்கட்டா அணி 10 போட்டியில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் கடந்த போட்டியில் 84 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றியது.

மூலக்கதை