சூரியனில் பூமியை விட பெரிய கரும் புள்ளி உருவானது: செயற்கைகோள்களுக்கு ஆபத்து

தினமலர்  தினமலர்
சூரியனில் பூமியை விட பெரிய கரும் புள்ளி உருவானது: செயற்கைகோள்களுக்கு ஆபத்து

சார்ஜா: சூரியனில் பூமியை விட பெரிய அளவிலான கரும்புள்ளி உருவாகி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் செயற்கை கோள்களுக்கு ஆபத்து எனவும் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகம்மது தலபா கூறியதாவது, ‛ சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களை காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் கரும் புள்ளியாக தோன்றுகிறது. தற்போது பூமியை விட பெரிய அளவிலான கரும்புள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கரும்புள்ளிக்கு சைக்கிள் 25 என பெயிரிடப்பட்டுள்ளது. இந்த சூரிய புள்ளியால் வரும் 2022ம் ஆண்டில் பூமியில் சில விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கை கோள்கள் கரும்புள்ளியால் சூரியனில் ஏற்படும் சூரியப் புயலால் பாதிப்பு அடையும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை