வறுமை குறித்து ஐ.நா., எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
வறுமை குறித்து ஐ.நா., எச்சரிக்கை

நியூயார்க் : கொரோனா நோய் தொற்றால் 17.5 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா சபையின் மனித உரிமைகள் சிறப்பு அதிகாரி ஆலிவியர் டே ஷட்டர் தெரிவித்தார்.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரசின் பாதிப்புகளால் வறுமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நோய் தொற்றால் 150 மில்லியன் முதல் 175 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகக்கூடும் என ஐ.நாவின் மனித உரிமைகள் சிறப்பு அதிகாரிகளில் ஒருவரும் நிபுணருமான ஆலிவியர் டே ஷட்டர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "எங்கள் வளர்ச்சி மாதிரியை நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,".


தீவிர வறுமையில் சிக்கி தவிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முறைசாரா தொழில்களிலோ, ஆபத்தான வேலைகளிலோ இருப்பவர்களிலும். அதிலும் பெண்கள் அதிகமாக உள்ளனர். உலகம் முழுதும், வறுமையில் வாடும் மக்கள் அதிகமாக உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக, மேலும், 17.5 கோடி மக்கள், வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது,

மிக மோசமான நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்காக, "20 ஆம் நூற்றாண்டில் செய்ததைப் போல, வழக்கம்போல பொருளாதார வளர்ச்சியைப் பற்றி நாம் கணக்கிட முடியாது,". நாடுகள் கற்பனை செய்யும் பொருளாதார மீட்சியை வடிவமைப்பதற்கான சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக நீதி ஆகியவை முன்நிபந்தனைகளாக கருதப்பட வேண்டும். உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமன், காங்கோ, வடகிழக்கு நைஜீரியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய உணவு நெருக்கடிக்கு ஆளாகக்கூடும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என பகுப்பாய்வு தெரிவித்ததாகவும், இந்த நாடுகளில் பஞ்சம் மற்றும் உணவு பாதுகாப்பின்மை ஏற்படும்.


அபாயத்துடன் மில்லியன் கணக்கானோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என கடந்த மாதம் ஐ.நா எச்சரித்திருந்தது. மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை “இப்போது இயற்கை பேரழிவுகள், பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் பொது சுகாதார நெருக்கடிகளால் மேலும் மோசமடைந்துள்ளது, இவை அனைத்தும் கொரோனா தொற்று நோயால் மேலும் அதிகரித்தன. இவ்வாறு கூறினார்.

மேலும் வல்லுநர்கள் கொரோனாவுடனான மோதலுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையிலான இடைவெளியை விவரித்தனர். காலநிலை மாற்றம் மற்றும் ஆயுத மோதல்களின் அபாயங்கள் மக்களை வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வுக்கு தள்ளக்கூடும். பெரும்பாலான மக்கள் மற்றும் அவர்களது வாழ்வாதாரங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளை நம்பியிருக்கும் மக்களாக இருப்பார்கள். இவ்வாறு நிபுணர்கள் கூறினர். கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், உலகளாவிய பொருளாதார மந்த நிலையும் உலக மக்கள் தொகையில் 1.4 சதவீதத்தினரை கொடிய வறுமையில் தள்ளிவிடும்.


கொரோனா மட்டும் தாக்காமல் இருந்திருந்தால் நடப்பு ஆண்டில் வறுமை விகிதம் 7.9 சதவீதமாக குறைந்திருக்கும் என்றும் உலக வங்கி கூறுகிறது. இந்தியாவுக்கான சமீபத்திய தரவுகள் இல்லாததால், அது உலகளாவிய வறுமையை கண்காணிக்கும் திறனை கடுமையாக தடுக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை