10 கோடி கோவிட் பரிசோதனைகளைக் கடந்து இந்தியா சாதனை

தினகரன்  தினகரன்
10 கோடி கோவிட் பரிசோதனைகளைக் கடந்து இந்தியா சாதனை

டெல்லி : 10 கோடி கோவிட் பரிசோதனைகளைக் கடந்து இந்தியா சாதனை படைத்துள்ளது.இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய கோவிட்-19 பரிசோதனை அதிகவேகமாக அதிகரித்து வருகிறது. இன்று மொத்த பரிசோதனை 10 கோடி இலக்கை(10,01,13,085) கடந்து இந்தியா சாதனை படைத்துள்ளது.மற்றொரு சாதனையாக கடந்த 24 மணி நேரத்தில், 14,42,722 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.நாடு முழுவதும் சுமார் 2000 பரிசோதனைக் கூடங்கள் உள்ளதால், நாட்டின் பரிசோதனை திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 15 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டில் உள்ள 1989 பரிசோதனைக் கூடங்களில் 1122 அரசு பரிசோதனைக் கூடங்களும் 867 தனியார் பரிசோதனை கூடங்களும் உள்ளன.அதிகளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர பரிசோதனை மூலம், பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு வீதமும் குறைந்துள்ளது.கடைசி ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 9 நாட்களில் செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை