பெண் விமானிகளின் முதல் அணி: இந்திய கடற்படையில் இணைந்தது

தினகரன்  தினகரன்
பெண் விமானிகளின் முதல் அணி: இந்திய கடற்படையில் இணைந்தது

டெல்லி : பெண் விமானிகளின் முதல் அணியை கடற்படை இணைத்துக் கொண்டது.இந்திய கடற்படையின் முதல் பெண் விமானிகளின் அணி தெற்கு கடற்படை தளத்தால் இணைத்துக் கொள்ளப்பட்டது. டோர்னியர் விமானத்தில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.லெப்டினெண்ட் திவ்யா சர்மா (புதுடெல்லி), லெப்டினெண்ட் சுபாங்கி சுவரூப் (உத்திரப் பிரதேசம்) மற்றும் லெப்டினெண்ட் ஷிவாங்கி (பிஹார்) ஆகியோர் முதல் அணியில் உள்ள மூன்று விமானிகள் ஆவர்.2020 அக்டோபர் 22 அன்று ஐ என் எஸ் கருடா, கொச்சியில் நடந்த பயிற்சி நிறைவு நிகழ்வில் பட்டம் பெற்ற ஆறு விமானிகளில் இந்த மூவர் அடங்குவர்.அலுவலர்களின் தலைமை அதிகாரி (பயிற்சி), தெற்கு கடற்படை, ரியர் அட்மிரல் அந்தோனி ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, டோர்னியர் விமானங்களை ஓட்டுவதற்கான முழு தகுதி பெற்ற விமானிகளுக்கு விருதுகளை வழங்கினார்.

மூலக்கதை