முதலிடம் பிடிப்பது இலக்கு: டிவிலியர்ஸ் நம்பிக்கை | அக்டோபர் 22, 2020

தினமலர்  தினமலர்
முதலிடம் பிடிப்பது இலக்கு: டிவிலியர்ஸ் நம்பிக்கை | அக்டோபர் 22, 2020

அபுதாபி: ‘‘புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதே இலக்கு,’’ என, டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.

எமிரேட்சில் நடக்கும் 13வது ஐ.பி.எல்., சீசனில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி அசத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 10 போட்டியில், 7 வெற்றி, 3 தோல்வி என, 14 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ் கூறியது: ஐ.பி.எல்., தொடருக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளோம். சிறந்த அணிகளுக்கு எதிரான 14 போட்டிகளில் மனஉறுதியுடன் போராடினால் இது சாத்தியம். எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். இதற்காக சில நேரங்களில் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக மட்டும் நாங்கள் முதலிடம் பெற விரும்பவில்லை. நாங்கள் இங்கே இருக்கிறோம், எங்களுக்கு இதற்கான தகுதி உள்ளது என்ற செய்தியை மற்ற அணிகளுக்கு தெரிவிப்பதற்காகவும் ‘நம்பர்–1’ இடம் பிடிக்க நினைக்கிறோம்.

இவ்வாறு டிவிலியர்ஸ் கூறினார்.

மூலக்கதை