பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி : கருத்துக் கணிப்பில் தகவல்!!

தினகரன்  தினகரன்
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி : கருத்துக் கணிப்பில் தகவல்!!

பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பான டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் முதல்வர் நிதீஷ் குமார் மீது மக்கள் கடும் கோபத்துடன் உள்ளது தெரிய வந்துள்ளது. கருத்து கணிப்பின் போது, \'நிதீஷ் குமார் அரசு மீது கோபமாக உள்ளீர்களா.. அந்த அரசு மாற வேண்டும் என கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு  61.1 சதவீத மக்கள் ஆம் கோபமாக இருக்கிறோம், அரசு மாற வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். மேலும் 25.2 சதவதம் பேர் கோபமாக இருக்கிறோம், ஆனால் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். 13.7 சதவீதம் பேர் கோபம் இல்லை, ஆட்சியையும் மாற்றத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.பிரதமர்  நரேந்திர மோடியின் செயல்பாடு குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்ற மற்றறொரு கேள்விக்கு   47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி,  28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 24.29 சதவீதம் பேர்தான் மிகவும் அதிருப்தி எனத் தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடு தொடர்பான கேள்விக்கும் மோடிக்கே ஆதரவு அதிகம் உள்ளது. அதாவது 42.91 சதவீதம் பேர் அதிக திருப்தி என்று தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தி என்று கூறியுள்ளனர். 26.47 சதவீதம் பேரே திருப்தியே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 34.4 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணிக்கு 31 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு 5.2 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை