ஒரினச்சேர்க்கையை அங்கீகரிக்க சட்டம்: போப் பிரான்சிஸ் பேச்சு

தினமலர்  தினமலர்
ஒரினச்சேர்க்கையை அங்கீகரிக்க சட்டம்: போப் பிரான்சிஸ் பேச்சு

ரோம்: ‛ஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை..' என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கை என்பதை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. சில நாடுகள் எதிர்க்கின்றன. இந்நிலையில் ஒரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போப் பிரான்சிஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் ரோம் நகரில் நடந்த திரைப்பட விழாவில் பிரான்செஸ்கோ என்ற பெயரில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அப்படத்தில் இரு ஓரினச்சேர்க்கையாளர்கள் தாங்கள் தத்தெடுத்த 3 குழந்தைகளுடன் தேவாலயத்திற்கு வருவது போன்றும், அவர்களை போப் உற்சாகப்படுத்துவது போன்றும் அந்த படமாக்கப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்ற போப் பிரான்சிஸ் பேசியது, ‛ஒரே பாலினத்தவர்கள் இணைந்து குடும்பமாக வாழ அதை அங்கீகரிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். அவர்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள். அவர்களை யாரும் வெளியேற்ற கூடாது' என பேசினார். ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரிக்க சட்டத்திருத்தம் தேவை என முதல்முறையாக போப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை