பிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர் மரணம்

தினமலர்  தினமலர்
பிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர் மரணம்

பிரேசிலியா: பிரேசிலில் கொரோனாவுக்கான தடுப்பூசியை சோதனை முறையில் போட்டுக்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அதேவேளையில் அவர் இறப்புக்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. சில தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனை அளவில் உள்ளன. அதற்கான சோதனையில் தன்னார்வலர்கள் பலர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் தன்னார்வலர்களின் உடல்களில் செலுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பின்விளைவுகள் ஏற்படின், சோதனை நிறுத்தப்பட்டு, மேற்கொண்டு ஆய்வினை தொடர்வர். இந்நிலையில், பிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ரா செனிகா ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை பிரேசிலில் சோதனை அடிப்படையில் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டது. அதில் ஒருவர் திடீரென உயிரிழந்ததால், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் இறப்புக்கான சரியான காரணம் குறித்தும் தன்னார்வலர் எந்த அளவிலான தடுப்பூசி சோதனையை எடுத்துக்கொண்டார் என்பது குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மேலும், தடுப்பூசி சோதனை தடையின்றி தற்போதும் வழக்கம்போல் தொடர்ந்து வருகின்றன.

மூலக்கதை