எல்லை தாண்டி வந்த சீன வீரர் ஒப்படைப்பு

தினகரன்  தினகரன்
எல்லை தாண்டி வந்த சீன வீரர் ஒப்படைப்பு

புதுடெல்லி: தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் பிடிபட்ட சீன வீரர், அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த 19ம் தேதி லடாக் எல்லையில் டெம்சோக் பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, எல்லைப் பகுதியை தாண்டி வந்த  சீன வீரர் ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் வாங் யா லாங் என்பதும், தவறுதலாக இந்திய பகுதிக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்நிலையில், சீன வீரரை திரும்ப ஒப்படைக்குமாறு அந்நாட்டு ராணுவம் கேட்டுக் கொண்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுசுல் மோல்டோ பகுதியில் சீன வீரர் வாங் யா லாங் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இதை சீன அரசும் உறுதி செய்துள்ளது.

மூலக்கதை