மீண்டு வருவோம்... வெற்றி பெறுவோம்!

தினகரன்  தினகரன்
மீண்டு வருவோம்... வெற்றி பெறுவோம்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி நிறைய பாடங்களை கற்றுத்தந்தது. அந்த தோல்வியில் இருந்து மீண்டு முன்பை விடவும் வலிமையான அணியாக வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என்று டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று களம் கண்ட டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164ரன் எடுத்தது. அந்த அணியின் தவான் 106* ரன் எடுத்தார். மற்றவர்கள் 14 ரன்னை தாண்டவில்லை. பஞ்சாப் தரப்பில் ஷமி 2, முருகன் அஷ்வின், நீஷம், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் பூரன் 53, மேக்ஸ்வெல் 32ரன் எடுத்தனர். டெல்லி அணியின் ரபாடா 2, ஆர்.அஷ்வின், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தோல்வியைத் தழுவியது குறித்து டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், ‘ஆட்டத்தின் சூழலை ஷிகர் தவான் நன்கு புரிந்துகொண்டு விளையாடினார். நாங்கள் இன்னும் ஒரு 10 ரன் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி வசமாகி இருக்கும். இந்த தோல்வி நிறைய பாடங்களை கற்றுத்தந்துள்ளது. தவறுகளை சரி செய்து அடுத்த போட்டியில் முன்பை விட வலிமையான அணியாக களம் காண்போம். வெற்றி பெறுவோம்’  என்றார்.

மூலக்கதை