இரவெல்லாம் தூங்கவில்லை

தினகரன்  தினகரன்
இரவெல்லாம் தூங்கவில்லை

வெற்றியை வசப்படுத்திய கிங்ஸ் லெவன் கேப்டன் ராகுல், ‘பலம் வாய்ந்த டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தை 19வது ஓவரிலேயே அற்புதமாக முடித்திருப்பது மகிழ்ச்சி. ஒவ்வொரு ஆட்டத்திலும் என் மனது புதிய எல்லைகளை தொடுகிறது. நான் பொய் சொல்லவில்லை. எங்கள் அணியில் 6 பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல்ரவுண்டருடன் விளையாடுவது அணியின் சிறப்பு. யாராவது ஒருவர் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். போன ஆட்டத்தில் இருந்து ஷமி நம்பிக்கையுடன் இருக்கிறார். அவரது பந்துவீசும் முறை மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. அர்ஷ்தீப்பும் சிறப்பாக பந்துவீசுகிறார். ஒரு ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கர்களாக வீசுவது வெகு சிறப்பு. மேக்ஸ்வெல் அதி அற்புதமாக விளையாடுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டபுள் சூப்பர் ஓவருடன் ஆட்டம் முடிந்த அன்றிரவு தூங்கவில்லை. அது குறித்தே நினைத்துக் கொண்டிருந்தேன். நம்மை விட ஆட்டம் பெரியது என்ற பணிவை அந்த ஆட்டம் ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

மூலக்கதை