மத்திய அரசு ஊழியர்கள் 30 லட்சம் பேருக்கு தீபாவளி போனஸ்' நாளைக்குள் கிடைக்கும்

தினகரன்  தினகரன்
மத்திய அரசு ஊழியர்கள் 30 லட்சம் பேருக்கு தீபாவளி போனஸ் நாளைக்குள் கிடைக்கும்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம், 30 லட்சம் ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இந்த போனஸ் தொகை நாளைக்குள் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதோடு பொதுமக்களின் நுகர்வு தேவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்த பணம் மாதம் ரூ.1000 வீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தசரா, தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வர இருக்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு உற்பத்தி சார்ந்த மற்றும் உற்பத்தி சாராத போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.  இதன் மூலம், 30.67 லட்சம் ஊழியர்கள் பயனடைவர். அவர்களுக்கு மொத்தம் 3,737 கோடி போனஸ் வழங்கப்படும்.  2019-20ம் நிதியாண்டுக்கான உற்பத்தி சார்ந்த போனஸ் மூலம் ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத்துறை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ உள்ளிட்ட அலுaவலகங்களில் பணிபுரியும் 16.97 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவர். இதற்காக 2,796 கோடி செலவாகும். உற்பத்தி சாராத போனஸ் மூலம் கெசடட் அல்லாத மத்திய அரசு ஊழியர்கள் 13.70 லட்சம் பேர் பயனடைவர். இதற்கு ₹946 கோடி செலவிடப்படும். இந்த போனஸ் ஒரே தவணையாக இன்னும் ஒரு வாரத்தில், அதாவது, விஜயதசமி பண்டிகைக்கு முன்பாக ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம், வரவிருக்கும் விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகையில் நடுத்தர மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து, பொருளாதாரத்தை உயர்த்தும்.இவ்வாறு அவர் கூறினாaர். எனவே, இந்த போனஸ் தொகை நாளைக்குள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர, ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1989 திருத்தத்தை ஏற்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போல ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் மூன்றடுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் திருத்தம் செய்தது. தற்போது இதை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் காஷ்மீரில் முன்கூட்டியே விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வழிவகுக்கப்பட்டுள்ளது.* குவதற்காக மொத்தம் 3,737 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* இது ஒரே தவணையாக, ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.* உற்பத்தி சாராத போனஸ் மூலம் அரசிதழ் சான்று (கெசடட்) அல்லாத மத்திய அரசு ஊழியர்கள் 13.70 லட்சம் பேர் பயனடைவர். இதற்கு ₹946 கோடி செலவிடப்படும்.* உற்பத்தி சார்ந்த ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத் துறை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் 16.97 லட்சம் பேர் பயன் பெறுவர். இதற்காக, 2,796 கோடி செலவாகும்.எப்படி நாளை கிடைக்கும்?விஜயதசமிக்கு முன்பாக போனஸ் வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். விஜயதசமி அடுத்த வாரம் திங்கட் கிழமை வருகிறது. அன்றைய தினம் வங்கி விடுமுறையாகும். 4வது சனிக்கிழமை என்பதால் வரும் சனிக்கிழமையும் வங்கி விடுமுறையாகும். விஜயதசமிக்கு முன்பாக நாளைதான் வங்கிகளின் கடைசி பணிநாளாகும். எனவே, நாளை இரவுக்குள் போனஸ் கிடைக்கலாம் என மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

மூலக்கதை