ஐபிஎல் 2020: டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2020: டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அபுதாபி: ஐபிஎல் டி20 பெங்களூரு அணிக்கு 85 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 13.3  ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மூலக்கதை