தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் சர்வதேச விஷயங்கள் குறித்து உரை

தினகரன்  தினகரன்
தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன்னுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் சர்வதேச விஷயங்கள் குறித்து உரை

டெல்லி: தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் சர்வதேச விஷயங்கள் குறித்து உரையாடினார். முக்கியமான சர்வதேச விஷயங்களை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய குடியரசின் அதிபர் தொலைபேசியில் விவாதித்தனர். தென்கொரிய குடியரசின் அதிபர் மூன் ஜே-இன்னுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று உரையாடினார்.அப்போது, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் முன்னேற்றம், சர்வதேச மதிப்பு சங்கிலிகளின் தற்போதைய பரவல், வளர்ச்சி சார்ந்த மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலான சர்வதேச வர்த்தக முறை மற்றும் உலக வர்த்தக அமைப்பின் முக்கிய பங்கு ஆகிய சர்வதேச விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேற்கண்ட விஷயங்கள் குறித்து தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்தவும் தங்களது தொலைபேசி உரையாடலின்போது தலைவர்கள் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை