அலுவல் ரீதியாக மட்டுமே முதல்வர் பினராயி விஜயனிடம் தொடர்பு : சொப்னா பரபரப்பு வாக்குமூலம்

தினகரன்  தினகரன்
அலுவல் ரீதியாக மட்டுமே முதல்வர் பினராயி விஜயனிடம் தொடர்பு : சொப்னா பரபரப்பு வாக்குமூலம்

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழங்கில் சொப்னா கைது செய்யப்பட்டார். அவரிடம் கிடுக்கிபிடியாக விசாரணை நடந்தது. இதில் முக்கிய தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் செப்னா வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அலுவல் ரீதியாக மட்டுமே தொடர்பு வைத்து இருந்தேன். அவரது குடும்பத்துடன் தனிப்பட்ட முறையில் எந்த தொடர்பும் இல்லை. ஷார்ஜா மன்னர் கேரளாவுக்கு வந்தார். அப்போது அவரை வரவேற்பது குறித்து தனது மனைவிக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் என்னிடம் கேட்டுக்கொண்டார். இதுதவிர எனது தந்தை இறந்தபோது, சிவசங்கரின் போனில் இருந்து என்னை அழைத்து இரங்கல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அலுவல் ரீதியான காரியங்களுக்காக முதல்வரை பலமுறை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறேன். அதுபோல விசா ஸ்டாம்பிங் செய்தல் உள்பட சில தேவைகளுக்காக முதல்வரின் தனிச்செயலாளர் ரவீந்திரன் என்னை பலமுறை அழைத்துள்ளார். இவ்வாறு ெசாப்னா தெரிவித்துள்ளார். இதேபோல் துபாயில் பணிபுரிந்து வரும் கேரளாவை சேர்ந்த ஒருவரை அங்கிருந்து நாடு கடத்தி கொண்டு வர அமீரக துணைத்தூதரின் உதவியை அமைச்சர் ஜலீல் நாடியதாகவும் சொப்னா கூறி உள்ளார். அந்த நபர் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

மூலக்கதை