திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6ம் நாள் பிரம்மோற்சவம் : அனுமந்த வாகனத்தில் காட்சிதந்த மலையப்ப சுவாமி

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6ம் நாள் பிரம்மோற்சவம் : அனுமந்த வாகனத்தில் காட்சிதந்த மலையப்ப சுவாமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ 6ம்நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 16ம்தேதி இரவு தொடங்கியது. 5ம்நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி, நாச்சியார் கோலத்தில் (மோகினி அலங்காரம்) அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது. கல்யாண மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை ெசய்த தனது பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு ராமர் அலங்காரத்தில் அனுமந்தரின் பக்தி பாவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக கிருஷ்ணர், ராமர், சீனிவாச பெருமாள் என அனைவரும் தானே என்னும் விதமாக ராமர் அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.பிரம்மோற்சவத்தில் கருடசேவைக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் அனுமந்த வாகனத்திற்கும் அளிக்கப்படுகிறது. இன்றிரவு யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கஜேந்திர மோட்சத்தில் யானை காப்பாற்றிய விரதமாக தன்னை சரணடையும் பக்தர்களை காப்பாற்றுவதற்காக மலையப்ப சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருள்கிறார்.

மூலக்கதை