அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் மழை உற்சாகத்தில் கமலா ‘டான்ஸ்’

தினகரன்  தினகரன்
அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் மழை உற்சாகத்தில் கமலா ‘டான்ஸ்’

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தேர்தல் பிரசாரத்தின் போது உற்சாகத்தில் மழையில் நடனமாடினார். கொரோனா பரவல் அச்சத்திற்கு மத்தியில் வருகிற நவ. 3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில் என்ற இடத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது திடீரென மழை கொட்டியது. அவர், கொட்டும் மழையின் போது குடையைப் பிடித்தவாறே உரையாற்றினார். ஒரு கட்டத்தில் விடாது மழையை ரசித்துக் கொண்டே, நளினமாக டான்ஸ் ஆடத் தொடங்கினார். இந்தக் காட்சிகள் அவரது ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது‌. மேலும் மழையில் தாம் நடனமாடும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ், ‘வெயிலோ மழையோ, ஜனநாயகம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை