பிடனை தேர்ந்தெடுங்கள், டிரம்பை நிராகரியுங்கள்: யு.எஸ்.ஏ., டுடே அறிவிப்பு

தினமலர்  தினமலர்
பிடனை தேர்ந்தெடுங்கள், டிரம்பை நிராகரியுங்கள்: யு.எஸ்.ஏ., டுடே அறிவிப்பு

வாஷிங்டன்: பிரபல அமெரிக்க செய்தித்தாளான யு.எஸ்.ஏ., டுடே, வருகின்ற அதிபர் தேர்தலில் டிரம்பை நிராகரித்து, பிடனை தேர்ந்தெடுக்க வேண்டும் என வெளிப்படையாக செய்தி வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது அடுத்த மாதம் தெரிந்து விடும். ஆட்சியை தக்க வைக்க டிரம்பும், அவரை வெற்றி கொள்ள பிடனும் கடுமையாக பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக வட மாகாணங்கள் பலவும் வாக்கு சீட்டு முறைக்கு மாறியுள்ளன. பல மாகாணங்களில் தேர்தல் தொடங்கிவிட்டது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மக்கள் வாக்கு செலுத்துகின்றனர். இந்த நிலையில் யு.எஸ்.ஏ., டுடே பத்திரிகை தனது தலையங்கத்தில் பிடனை தேர்வு செய்யும்படியும், டிரம்பை நிராகரிக்கும் படியும் வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆட்டம் கண்டுள்ள நாட்டிற்கு அமைதியான மற்றும் திறனுள்ள நபராக பிடன் இருப்பார் என கூறியுள்ளது.


1982-ல் தொடங்கப்பட்ட இந்த பத்திரிக்கை தங்கள் வரலாற்றில் முதல்முறையாக ஒரு அதிபர் வேட்பாளருக்கு ஆதரவாக நேரடியாக ஓட்டு கேட்டு செய்தி வெளியிட்டுள்ளது. பிடனுக்கு வாக்களிக்க சொல்லி இருந்தாலும் அதன் காரணமாக செய்தி வழங்குவதில், அதிபர் வேட்பாளர்களின் பிரச்சாரங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. "நாங்கள் மீண்டும் ஒரு அதிபர் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம். அப்படி செய்ய வேண்டிய தேவை இருக்காது என நம்புகிறோம்" என தலையங்கத்தில் கூறியுள்ளது. ஆசிரியர் குழுவின் ஒருமனதான ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூலக்கதை