பாலக்காடு அருகே விஷச்சாராயம் குடித்த 5 பேர் பலி

தினகரன்  தினகரன்
பாலக்காடு அருகே விஷச்சாராயம் குடித்த 5 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே வாளையாறு செல்லங்காவு பழங்குடி காலனியை சேர்ந்தவர் ராமன் (61). அவரது உறவினர் சிவன் (37), சகோதரர் மூர்த்தி (28), உறவினர் ஐயப்பன் (58), அவரது மகன் அருண் (25). இவர்கள் உட்பட உறவினர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை ஒன்றாக சாராயம் குடித்துள்ளனர். மறுநாள் ராமன், ஐயப்பன், சிவன் அடுத்தடுத்து இறந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூர்த்தி, அருண் ஆகியோர் இறந்தனர். தற்போது 4 பெண்கள் உள்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை