கொலோன் ஏடிபி டென்னிஸ் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ் வெற்றி

தினகரன்  தினகரன்
கொலோன் ஏடிபி டென்னிஸ் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ் வெற்றி

ஜெர்மன்: கொலோனில் நடந்த ஏடிபி டென்னிஸ் போட்டியில் ரஷ்ய இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ், சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த ஆண்டில் அவர் வென்றுள்ள முதல் ஆடவர் ஒற்றையர் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வரெவ்(23). கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த மாதம் நியூயார்க்கில் நடந்த யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அதில் அவர் பட்டம் வெல்வார் என டென்னிஸ் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலியாவின் டொமினிக் தீமிடம், 5 செட்களில் போராடி தோல்வியடைந்தார். இதனால் யு.எஸ்.ஓபன் கை நழுவிய நிலையில், தற்போது கொலோனில் சாதித்திருக்கிறார்.கொலோன் இறுதிப்போட்டியில் அவருடன், கனடாவின் 20 வயதேயான இளம் வீரர் பெலிக்ஸ் ஆகர் மோதினார். உள்ளரங்கில் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்வரெவ் 6-3, 6-3 என நேர் செட்களில் அவரை எளிதாக வீழ்த்தி ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். ஏடிபி டென்னிசில் ஸ்வரெவின் 12வது சாம்பியன் பட்டம் இது என்ற போதிலும், இந்த ஆண்டு அவர் வெல்லும் முதல் ஒற்றையர் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் அவரே வெல்வார் என்ற ரசிகர்களின் கணிப்பை, மெய்யாக்கி உள்ளார்.‘‘இந்த வெற்றி எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால் பெலிக்ஸ், இப்போட்டியில் அற்புதமாக ஆடினார். அடுத்து வரும் ஏதேனும் ஒரு போட்டியில் அவர் வெற்றிக்கோப்பையை கைப்பற்றுவார். அது விரைவில் நடக்கும். கடந்த 2 ஆண்டுகளில் ஏடிபி தொடரின் 6 இறுதிப்போட்டிகளில் அவர் ஆடியிருக்கிறார். அவரும் வளர்ந்து வரும் நட்சத்திரம்தான்’’ என்று ஸ்வரெவ் அவரை மனமார பாராட்டியுள்ளார்.

மூலக்கதை