இந்திய வம்சாவளி அசத்தல்

தினமலர்  தினமலர்
இந்திய வம்சாவளி அசத்தல்

பிரிட்டன் பிரதமர் ராஜினாமா?

லண்டன்: பிரிட்டன் பிரதமர்போரிஸ் ஜான்சன், சம்பளத்தை காரணம் காட்டி, அடுத்த ஆண்டு, தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு சம்பளமாக பெறும், 1.3 கோடி ரூபாய், அவருக்கு போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. அவர், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன், 2.4 கோடி ரூபாய், வருமானமாக பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளி அசத்தல்

டெக்சாஸ்: அமெரிக்காவில், இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, ஒவ்வொரு ஆண்டும், 'இளம் விஞ்ஞானி' என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான போட்டியில், டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அனிகா செப்ரோலு, 14, என்ற இந்திய வம்சாவளி மாணவி, வெற்றி பெற்றார். கொரோனாவுக்கான சிகிச்சை முறையை கண்டுபிடித்த அவருக்கு, 18 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.முதல் விமானம் தரையிறக்கம்டெல் அவிவ்: கடந்த ஆகஸ்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் இடையில், வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே, விமான சேவையை துவக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில், ஐக்கிய அரபு எமிரேட்சின் முதல் பயணியர் விமானம், நேற்று தரையிறங்கியது.

வங்கதேச பிரதமரின் பரிசுகள்

தாஹா: நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, நவராத்திரி விழாவை முன்னிட்டு, புடவை, இனிப்புகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை, நேற்று அனுப்பி வைத்தார். தலைநகர் கோல்கட்டாவில் உள்ள வங்கதேச உயர் துாதரகத்தின் துணை துாதர் வாயிலாக, இந்த பரிசுகள், முதல்வரிடம் வழங்கப்பட்டன.

4 கோடியை கடந்த பாதிப்பு

லண்டன்: உலகம் முழுதும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, நான்கு கோடியை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை, 11 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில், அதிக அளவிலான பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதற்கிடையே, வைரசுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில், ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சீக்கியர்களுக்கு அழைப்பு

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானின் நன்கனா சாகிப் குருத்வாராவில், சீக்கிய மத குருவான, குருநானக் தேவின், 551வது பிறந்த நாள் விழா, அடுத்த மாதம், 27ல் துவங்கி, மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விழாவில் பங்கேற்க, இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு, பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மூலக்கதை