இந்திய இளைஞருக்கு சர்வதேச விருது

தினமலர்  தினமலர்
இந்திய இளைஞருக்கு சர்வதேச விருது

லண்டன் :

பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பிளாஸ்டிக் சர்ஜனுக்கு இந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த இளைஞர் என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த இளைஞர் என்ற விருதை வழங்கி வருகிறது. 110 நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 40 வயதுக்கு உட்பட்ட நபர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது பிரிட்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜன் ஜஜினி வர்கீஸ் 37 என்பவருக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.இந்திய வம்சாவளியான இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க அறிவியல் பங்களிப்புகளை அளித்துள்ளார். இதன் காரணமாகவே இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை