கொரோனா தடுப்பு மருந்து செலுத்த ஊசிகள் தயாரிக்கும் யுனிசெப்

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பு மருந்து செலுத்த ஊசிகள் தயாரிக்கும் யுனிசெப்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

தற்போதுவரை 40-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளன. அடுத்த ஆண்டு அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிடும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் நிறுவனம் அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் ஊசிகளை தயாரித்து உலகம் முழுவதும் குழந்தைகள் நலனுக்கு இலவசமாக அளிக்க முடிவெடுத்துள்ளது.

கொரோனாவுக்கு வெற்றிகரமாக தடுப்புமருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவற்றை உடலுக்குள் செலுத்த அதிக எண்ணிக்கையில் ஊசிகள் தேவைப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் டிஸ்போசபிள் சிரின்ஜ் எனக்கூறப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் ஊசிகளை தயாரிக்க மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உலகில் கொரோனா பாதித்தவர்கள் அனைவருக்கும் செலுத்த யுனிசெப் நிறுவனம் ஊசிகளை தயாரித்து வருகிறது.


தற்போதுவரை 5 கோடி ஊசிகள் தயாரிக்கப்பட்டு யுனிசெப் கிடங்கில் பாதுகாக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை 20 கோடியை தொடும்போது அவை உலக நாடுகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதனை செலுத்த ஊசி இல்லாமல் சிரமப்படும் நாடுகளுக்கு யுனிசெப் நிறுவனம் உதவுகிறது. யுனிசெப் நிறுவனத்தின் இந்த முயற்சி சமூகவலைதளங்களில் வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை