ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நூலிழை வாய்ப்பு!!!

தினகரன்  தினகரன்
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நூலிழை வாய்ப்பு!!!

அபுதாபி : நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நூலிழை வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அபுதாபியில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியிலும் சென்னை அணி தோல்வியடைந்ததால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தோல்வி மூலம் சென்னை அணியின் அரைஇறுதி கனவு ஏறக்குறைய தகர்ந்தது. ஆனால் இன்னும் கூட சென்னை அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இப்போது வரை சென்னை அணி 10 போட்டியில் விளையாடி 3 இல் வெற்றிப் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இப்போது சென்னை அணி மீதமுள்ள 4 போட்டிகளில் கட்டாயமாக வெற்றிப் பெற வேண்டும். அப்படி வெற்றிப் பெற்றால் சென்னை அணி 14 புள்ளிகளை பெறும்; ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளும்.ஆனால் இன்னொரு போட்டியில் தோற்றால் சென்னை அணி நிச்சயமாக ஐபிஎல் தொடரில் நீடிக்காமல் வெளியேறும். மேலும் சென்னை அணி அடுத்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் மட்டும் போதாது. பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இனி வரும் போட்டிகளில் எப்படி விளையாடப்போகிறது என்பதும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொருத்தும் சென்னைக்கான அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் .

மூலக்கதை