காணொளி துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் இளவேனில்

தினகரன்  தினகரன்
காணொளி துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் இளவேனில்

புதுடெல்லி: சர்வதேச ஏர் ரைபிள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்க பக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வங்க தேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் ‘ஷேக் ரஸ்ஸல் சர்வதேச ஏர் ரைபிள் சாம்பியன்ஷிப்’ போட்டி  நடந்தது. கொரோனா பீதி காரணமாக இந்தப் போட்டியில் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாடுகளில் இருந்தபடியே  காணொளி காட்சி மூலம் பங்கேற்றனர். இந்தியா, கொரியா, பூடான் உட்பட 6 நாடுகள் இந்த ‘60 ஷாட்’ போட்டியில் கலந்துக் கொண்டன. பெண்கள் பிரிவில்  பங்கேற்ற  உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இளவேனில் வாலறிவன்(இந்தியா) 627.5புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார். இந்த பிரிவில் 622.6 புள்ளிகள் எடுத்த ஜப்பான் வீராங்கனை ஷியோரி ஹிராட்டா வெள்ளி, 621.1புள்ளிகள் சேர்த்த இந்தோனேஷிய வீராங்கனை வித்யா டோயிபா  வெண்கலமும் வென்றனர். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஷாகு துசார் மானே 623.8 புள்ளிகள் சேர்த்து 2வது இடம் பிடித்ததால் வெள்ளி வென்றார். இந்த பிரிவில் 630.9 புள்ளிகள் குவித்த ஜப்பான் வீரர் நவோயா ஒகடா தங்கமும், வங்க தேச வீரர்  பாகி அப்துல்லா 617.3 புள்ளிகள் எடுத்து வெண்கலமும் கைப்பற்றினர்.இந்தப் போட்டியில் வென்றதின் மூலம் இளவேனிலுக்கு 1000, மானேவுக்கு 700 அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

மூலக்கதை