கண்காணிக்கலாமே! பணியாற்றுவதில் சுணக்கம் என குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
கண்காணிக்கலாமே! பணியாற்றுவதில் சுணக்கம் என குற்றச்சாட்டு

திருப்பூர்:திருப்பூரில், ஆயுதப்படை போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்படும் ஸ்டேஷன்களில், முறையாக பணி செய்யாமல், 'ஹாயாக' பொழுதுபோக்குவதாக, சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகர போலீ சில் வடக்கு, தெற்கு என, இரண்டு போலீஸ் சரகம் செயல்படுகிறது. இவற்றின் கட்டுப்பாட்டில், போக்குவரத்து, இரண்டு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட, 12 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன.போலீஸ் ஸ்டேஷன்களில் நீண்ட காலமாக போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதனால், பணியில் உள்ள போலீசாருக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.இதை சமாளிக்க, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து பணிகளில், ஆயுதப்படை போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களுக்கு சென்று, இன்ஸ்பெக்டரிடம் 'ரிப்போர்ட்' செய்த பின், ஒதுக்கப்படும் பணிகளைஅவர்கள் பார்க்க வேண்டும். இப்பணியில், மாநகர ஆயுதப்படையில் உள்ள, 380 போலீசார், பட்டாலியன், 120 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பணியில் 'டிமிக்கி'ஆயுதப்படை போலீஸ் அலுவலகத்தில் இருந்து, ஸ்டேஷன் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் போலீசார் பலரும், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் முறையாக 'ரிப்போர்ட்' செய்வதில்லை.
பணியில் இணைந்தாலும், ஒதுக்கப்படும் பணிகளை மேற்கொள்ளாமல், சக நண்பர்களுடன் இணைத்து, ஓய்வெடுத்து, பொழுதுபோக்குகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.இது குறித்து, போலீசார் கூறியதாவது:ஆயுதப்படை போலீசாருக்கு, சுழற்சி முறையில் ஒதுக்கப்படும் பணிகளை கூட மேற்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் பொறுப்பாளர்களிடம் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர்.போக்குவரத்து போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும் போலீசார், அங்கு நிற்பதில்லை. அவர்களுக்கு, ஸ்டேஷன்களில் பணிபுரியும் சிலரே துணயைாக உள்ளனர்.
சமீபத்தில், ஆயுதப்படையில் இருந்து ஸ்டேஷன் 'டியூட்டி'க்கு அனுப்பி வைக்கப்பட்ட போலீசார் நான்கு பேர், சம்பந்தப்பட்ட ஸ்டேஷனில், 'ரிப்போர்ட்' செய்யாமல், அறைக்கு சென்று ஓய்வு எடுத்தது, தெரிய வந்தது. போலீஸ் உயரதிகாரிகளின் கண்காணிப்பு குறைவு தான், இதற்கு காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கூறுகையில், ''இதுதொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை; விசாரணை நடத்தப்படும்,'' என்று மட்டும் கூறினார்.

மூலக்கதை