சீனா உறவில் பாதிப்பு ஏன்?

தினமலர்  தினமலர்
சீனா உறவில் பாதிப்பு ஏன்?

புதுடில்லி: ''எல்லையில் நிலவும் அமைதியின்மையால், இந்திய - சீன உறவு பாதிக்கப்பட்டு உள்ளது,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.


டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: எல்லையில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவும் பாதிக்கப்படும்; இந்தியா - சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் இது தான் காரணம். எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த, இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.


சீனாவுடன் ராணுவ கமாண்டர் அளவில், தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சு விபரங்களை, இப்போது வெளியில் சொல்ல முடியாது. ஆனாலும், இரு தரப்புக்கும் இடையே நடக்கும் இந்த பேச்சில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மட்டும் இப்போது கூற முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை