அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து அதிகரிப்பு

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 9ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 55 ஆயிரத்து, 150 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது, இந்திய மதிப்பில்,40.26 லட்சம் கோடி ரூபாய் ஆகும். மேலும், இது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்வாகும். மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய பண மதிப்பு அதிகரித்த காரணத்தால், கையிருப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 9ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 42 ஆயிரத்து, 829 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 40.26 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் இருப்பு, 362 கோடி டாலர் அதிகரித்து, 54 ஆயிரத்து, 564 கோடி டாலராக இருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், 0வெளிநாட்டு பண இருப்பு, 574 கோடி டாலர் அதிகரித்து, 50 ஆயிரத்து, 878 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மேலும், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 11.3 கோடி டாலர் அதிகரித்து, 3,660 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.67 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மூலக்கதை