ஆபரணங்கள் தேவை மெதுவாக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ஆபரணங்கள் தேவை மெதுவாக அதிகரிப்பு

மும்பை:நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் தேவை மெதுவாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 20-– 25 சதவீதம் சரிவு காண வாய்ப்பிருப்பதாக, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது குறித்து கவுன்சிலின் தலைவர் கொலின் ஷா கூறியதாவது:கொரோனா பாதிப்புகள் காரணமாக, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 20 – 25 சதவீதம் சரிவைக் காணும் என எதிர்பார்க்கிறோம். தேவைகள் மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டில் தான், கடந்த 2019 –20 நிதியாண்டில் இருந்த அளவிலான வளர்ச்சி இருக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், காணொலி வாயிலாக, பன்னாட்டு ஆபரண கண்காட்சியை, 5 நாட்கள் நடத்தி முடித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் இதில் பங்கெடுத்துள்ளன.இந்த கண்காட்சியின் வாயிலாக, கிட்டத்தட்ட, 1000 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் நடைபெற்றிருப்பதாக, கவுன்சில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை