டுபிளசி அரைசதம்: சென்னை அணி ரன் குவிப்பு

தினமலர்  தினமலர்
டுபிளசி அரைசதம்: சென்னை அணி ரன் குவிப்பு

சார்ஜா: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டுபிளசி அரைசதம் கடந்து கைகொடுக்க சென்னை அணி 20 ஓவரில் 179 ரன்கள் குவித்தது.ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் விளையாடுகின்றன. சென்னை அணியில் பியுஸ் சாவ்லா நீக்கப்பட்டு கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.சென்னை அணிக்கு டுபிளசி (58), வாட்சன் (36), அம்பதி ராயுடு (45*), ரவிந்திர ஜடேஜா (33*) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. டில்லி அணி சார்பில் நார்ட்ஜே 2 விக்கெட் கைப்பற்றினார்.

மூலக்கதை