அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிம்பு!

தினமலர்  தினமலர்
அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிம்பு!

ஒல்லியான தேகம் கொண்டிருந்த நடிகர் சிம்பு, நடுவில் உடல்பருமனாக தோன்றினார். அவரது உடல் குண்டாகிவிட்டதால் முன்பு போல் சுறுசுறுப்பாக நடிக்க முடியாமல் போனது. இதனால் நிறைய பட வாய்ப்புகளை இழக்க நேரிட்டது.

இதையடுத்து மீண்டும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிம்பு ஈடுபட்டு வந்தார். இதற்காக வெளிநாடு சென்று சிறப்பு பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது, டயட் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதன் மூலம் சுமார் 21 கிலோ வரை சிம்பு எடை குறைந்திருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் தனது புதிய தோற்றத்தை யாருக்கும் காட்டாமல் சிம்பு மறைத்து வருகிறார். சமீபத்தில் திருப்பதி மற்றும் மதுரை கோயில்களுக்கு சென்றிருந்த போது கூட புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்காமல், முகத்தை மூடியபடி காரில் ஏறி சென்றிவிட்டார்.

இந்நிலையில் சிம்புவின் நெருங்கிய நண்பரான ஹரிஹரன் அவரது தோற்றம் குறித்து டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'சுமார் 7 மாதங்கள் கழித்து சிம்புவை தான் சந்தித்ததாகவும், அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருப்பதாகவும் ஹரி குறிப்பிட்டுள்ளார். "இது வேற லெவல் மாற்றம்", என்று அவர் ஆச்சரியப்பட்டுள்ளார்.

மூலக்கதை