“தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என”.. விஜய் சேதுபதி பற்றி பார்த்திபன் பதிவு

தினமலர்  தினமலர்
“தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என”.. விஜய் சேதுபதி பற்றி பார்த்திபன் பதிவு

800 என்ற பெயரில் தயாராகும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. நெட்டிசன்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வருகின்றனர். டிவிட்டரிலும் ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முத்தையா முரளியின் சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி. எதிர்ப்புகள், -எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும் பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத் தாண்டி சிக்சராக விளாசி (அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என) ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls போல ஆடவைத்து ஆரவாரத்துடன் 'தமிழ்மக்கள் செல்வந்தர் ஆகிவிடும் வியூகமோ? என்பதென் யூகம்! (காலங்காத்தால...) நடப்பது நன்மையே. so நன்மையே நடக்கும் என நம்புவோம்!” என இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியும், பார்த்திபனும் துக்ளக் தர்பார் படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை